சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்...
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்....
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை "
குறள் : 1031
சுழற்றும் -சுற்றித் திரிந்தாலும்
ஏர் -உழவுத்தொழில்
பின்னது -வழியதே
உலகம்-இவ்வுலக மக்கள்
அதனால்- அதன் காரணமாக
உழன்றும் - துன்பம் துய்தலாயினும்
உழவே - உழவுத்தொழிலே
தலை- முதன்மையானது.
பல தொழில்களைச் செய்து வரும்
இந்த உலகமானது ஏர்த்தொழிலின்
பின்னாலேயே நிற்க வேண்டியுள்ளது.
ஆதலால் எவ்வளவு துன்பம்
நிறைந்த தொழிலாக
இருந்தாலும் உழவுத்தொழிலே
முதன்மையானதாகும்.
விளக்கம் :
உலகில் பல தொழில்களைச் செய்யும்
மக்கள் உள்ளனர்.
அதனால்தான் இந்த உலக இயக்கம்
இன்றளவும் நில்லாமல் இயங்கிக்
கொண்டிருக்கிறது.
அனைத்துத் தொழில்களும் ஒன்றுக்கொன்று
சார்புடையவை என்பது மறுக்கமுடியாத
உண்மை.
இயந்திரமயமான இந்த உலகில் இயந்திரங்கள்
இல்லை என்றால் வாழமுடியாது என்ற
நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
மனிதன் செய்யும் வேலைகளை எல்லாம்
பங்கு போட்டுக்கொள்ள இயந்திரங்கள்
வந்துவிட்டன.
சமையலறையில் இருக்கும் பொருட்களும்
இதற்கு விதிவிலக்கல்ல.
சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்கள்
எல்லாம் இயந்திரங்களால் உருவாக்கப்
பட்டவையாக இருக்கலாம்.
ஆனால் சமைக்கப் பயன்படும் பொருட்கள்
வாங்க உழவனிடம்தானே செல்ல வேண்டும்.
அரிசி, காய்கறி இல்லாமல் சமையல்
நடந்துவிடுமா என்ன!
அங்க சுத்தி இங்க சுத்தி எங்க சுத்தி
வந்தாலும் இறுதியில்
உணவுக்காக உழவனிடம்தான் வந்து
நிற்க வேண்டியுள்ளது.
அதனால் எத்தனை இடர்தரு
பணியாக இருந்தாலும் உழவுத்தொழில்தான்
தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.
யாராக இருந்தாலும் உணவுக்காக
உழவன் பின்னால் போய்தான்
நிற்க வேண்டும்.
அப்படியானால் மற்றவை எல்லாம் உழவுத்
தொழிலுக்குப் பின்னால் என்பதுதானே
உண்மை.
இதைத்தான் வள்ளுவர் எத்தனை தொழில்கள்
இருந்தாலும் அத்தனையும்
உழவுத்தொழிலுக்குப் பின்னதுதான்
என்பதைச் சுழற்றும் ஏர்ப் பின்னது
உலகம் என்கிறார்.
எத்தொழிலைச் செய்து உலகமெல்லாம்
சுற்றி வந்தாலும் பசி வந்ததும்
உணவு முன்னால் தான் போய்
அமர்கிறோம்.எங்கு சென்றாலும்
நாம் இறுதியாக வந்து நிற்குமிடம்
உணவுக்கூடம்தான்.
அந்த உணவுக்குத் தேவையான
பொருட்களை வாங்க உழவனிடம்தான்
போய் நிற்க வேண்டும்.
எனவே உழவுத் தொழில்தான்
முதன்மையான தொழில் என்பது
வள்ளுவர் கருத்து.
English couplet :
" Howe'er they roam, the world must follow still
the plougher's team;
Though toilsome, culture of the ground as
noblest toil esteem "
Explanation:
Agriculture though laborious , the most excellent
form of labour for people, though they go about
(in search of various employments ) have at lost
to resort to the former.
Transliteration :
"suzhandrum Erppinnadhu ulagam adhanaal
uzhandhum uzhavae thalai "
Comments
Post a Comment