வாழ்த்துப்பா

           வாழ்த்துப்பா

கூடல் நகரில் கூடிய முதலணி
 கூடி செய்து வந்தது தமிழ்ப்பணி
மராட்டியத்தில் மலர்ந்த ஆசிரியர் கூட்டணி 
ஆற்றிவருவது நல்லதோர் அறப்பணி!

ஆசிரியப்பணி என்பது அறப்பணி 
அறப்பணிதான் குழுமத்தின் பொதுப்பணி
பொதுப்பணி என்பது குமுக நற்பணி
நற்பணி ஆற்றுவது ஆசிரியர் முதற்பணி!

 ஆசிரியர் யாவரும் நின்றன் பின்னணி
 குழுமத்தின் செயல் எப்போதும் முன்னணி
 உம்  தலைமையில் திரளும் மாபெரும் பேரணி
 தமிழுக்கு வாய்த்ததோர் நல் கூட்டணி!

  வாணிக்குச் சேவை செய்யும் தோணி
  நீவீர் எனல் உயர்வு நவிற்சி அணி
  பாரணி தமிழுக்கு அழகுத் தேரணி இது
  என்பது வேற்றுப் பொருள் வைப்பணி!

   தமிழுக்காய் உழைக்கும் வல்லொலி 
   என்பது என் தற்குறிப்பேற்ற அணி
   வானன்ன சேவை புரிவீரென வாழ்த்தி
   மகிழ்வது நான் கூறும் உவமையணி!

    ஓரணியாய்த் திரள்தலால் பெற்றதிந்த உயர்வணி
    ஓடி வந்து உதவுதல் குமுகத்தின் தனிப்பாணி
    தரணியில் உம் பணி முதலணியாய்த் திகழ
    பாவணியைத் தாரணியாய்ச் சூட்டி வாழ்த்துகிறேன்!
   

Comments

Popular Posts