காலத்தினாற் செய்த நன்றி

காலத்தினாற் செய்த நன்றி...


"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
 ஞாலத்தின் மாணப் பெரிது "
                                                       குறள் : 102
                                                       
காலத்தினால் _ ஏற்ற காலத்தில்
செய்தநன்றி _ செய்த உதவி
சிறிதெனினும் _அளவில் சிறியதாயினும்
ஞாலத்தின் _ உலகத்தைவிட
மாணப் பெரிது _ மிகப் பெரியது

உரிய காலத்தில் செய்யப்படும் உதவியானது
சிறிதாக இருப்பினும் அது இவ்வுலகத்தைவிடப்
பெரியதாகக் கருதப்படும்.

விளக்கம்:

ஒருவனுக்கு மிகவும் தேவையாக இருக்கும்
நேரத்தில் செய்யப்படும் உதவியானது
 அளவில் மிகச் சிறியதாக இருக்கலாம்.
ஆனால் அந்த உதவியானது எப்படிப்பட்ட 
தேவையான  காலத்தில் செய்யப்பட்டது என 
எண்ணிப் பார்க்குமிடத்து அதன் மதிப்பு 
உலகைவிட பெரியதாகக் கருதப்படும்.

அடிபட்டு கீழே விழுந்து கிடந்தவனை 
உரிய நேரத்தில் தூக்கிச் சென்று 
 மருத்துவமனையில் சேர்ப்பது அவன் 
 உயிரைக் காக்கும் செயலாக   அமையும்.
அதுதாங்க உதவி.
தண்ணீர் இல்லாத வனாந்தரத்தில் 
தவித்துக் கிடக்கும் வாய்க்கு ஒரு மடக்கு 
தண்ணீர் தருவது அந்த நேரத்தில் 
அவருக்கு பெரிய உதவியாக கருதப்படும்.
      
பேருந்தில் பயணம் செய்யும்போது  
பயணச்சீட்டு வாங்க கைப்பையைத் 
திறந்து பணத்தைப் பார்க்கிறோம்.
 பையில் பணமில்லை.
பையில் பணத்தை வைக்கிறேன் என்று 
மேசையில் வைத்துவிட்டு வந்தாயிற்று .
இப்போது பயணச்சீட்டு எடுக்க என்ன செய்வது....
திருதிருவென்று திருட்டு முழி முழிப்போம் பாருங்க...
நிலைமையைப் புரிந்து கொண்டு பக்கத்தில் 
அமர்ந்திருப்பவர் பணம் கொடுத்துவிட்டால்....
ஏதோ ஒரு கண்டத்தைத் தப்பித்துவிட்டது 
போன்ற ஒரு நிம்மதி.....
அப்போது நம் கண்களில் தெரியுமே கெஞ்சல்....
அதுதாங்க காலத்தினால் செய்த உதவி.
 உதவி என்பது எப்படி செய்கிறோம் ....
  எவ்வளவு செய்கிறோம்....
  யாருக்கு செய்கிறோம்... 
  என்பது ஒரு பொருட்டே அல்ல...
 எப்போது செய்கிறோம்....
 எந்த நேரத்தில் செய்கிறோம் 
 என்பது மிக மிக முக்கியமான ஒன்று.
அதனால்தான் காலத்தினால் செய்த நன்றி ....
என்று காலத்திற்கு அதிக முக்கியத்துவம் 
கொடுக்கிறார் வள்ளுவர்.
      
Translation : 

 " A timely benefit though thing of little worth
 The gift itself in excellence transcends the earth "

Explanation 

 A favour conferred in the time of need though it be small 
  is ( in value ) much larger than the world .

Transliteration :

 "   Kaalaththinaal seytha nandri siritheninum
     Gnaanaththin maanap perithu "


      
     
     
    
      
      

Comments

Popular Posts