பிறந்தநாள் வாழ்த்து

        பிறந்தநாள் வாழ்த்து

எழுபத்து மூன்று அகவை
      இறைவன் அருளால் காண்கின்றீர்! 

நிறைவாய் வாழ்தல் எதுவென்று
       மறையாய்ப் போதித்து வாழ்கின்றீர்!

போகம் தேடிடும் உலகினையே 
       போதகம் செய்து காக்கின்றீர்! 

வேதம் வாழ்வின் வெளிச்சம் என
           வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றீர்! 

வெளிச்சம் அறியா உலகினையே 
           ஜீவ ஒளியைக் காண செய்கின்றீர்!

ஜீவன் தன்னை காத்திடவே 
         ஜீவதண்ணீர் அண்டை நடத்துகின்றீர்! 

தாகமான உயிர்களுக்கு
          ஜீவ ஓடை தன்னைக் காட்டுகின்றீர்!

கண்ணீரில் வாழும் உயிர்களை
       கல்வாரி நோக்கச் செய்கின்றீர்! 

ஆறுதல் தருவார் ஏசுவென
        தேறுதல் தந்து தேற்றுகின்றீர்! 

தேவன் தந்த வரங்களையே
        தெய்வப் பிள்ளைகளுக்காய்த் தருகின்றீர்!

நெடுநாள் உலகில் வாழ்ந்து 
          நித்தம் அருள் மழை பொழிந்து

நூற்றாண்டுவிழா கண்டு 
      நூறாண்டு காலம் வாழ்க நன்று!
        

Comments

Popular Posts