இதனை இதனால் இவன்....

 இதனை இதனால் இவன் முடிக்கும்.....

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் 
                        குறள்  : 517

இதனை _ இச்செயலை
இதனால் _ இம்முறையால் , இந்தக் காரணத்தால்
இவன் முடிக்கும் _ இவன் செய்து முடிப்பான்
என்று _ என்பதாக 
ஆய்ந்து _ ஆராய்ந்து
அதனை _ அந்தச் செயலை
அவன்கண்_ அவனிடத்தில்
விடல் _ விட்டு விடுக

இச்செயலை இம்முறையால் இவன் செய்து
முடிக்கும் திறன் பெற்றவன் என்பதை 
ஆராய்ந்து அச்செயலை செய்துமுடிக்கும்படி
அவனிடத்தில் ஒப்படைத்துவிட வேண்டும்.

விளக்கம் : 

ஒரு செயலை செய்யும்படி ஒப்படைக்கும்
முன்பு நாம் தேர்ந்தெடுக்கும் நபரைப் பற்றி
பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பார்க்க 
வேண்டும். நாம் ஒப்படைக்கப் போகும்
செயலைப் பற்றிய முழு அறிவும் 
கொண்டவனாக இருக்க வேண்டும்.

அப்படியே அறிவு பெற்றிருந்தாலும்
செய்யும் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறானா 
என்பதை அறிய வேண்டும்.
ஆர்வம் இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள்
செய்து முடிக்கும் வலிமை பெற்றவனாக 
இருக்க வேண்டும்.
இப்படி எல்லா கோணத்திலும் ஆராய்ந்து 
பார்த்த பின்னரே ஒருவனிடம் ஒரு
வேலையை வழங்க வேண்டும்.

திறன் கொண்டவனிடம் மட்டுமே பணி
வழங்குதல் வேண்டும்.
இது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது
மிகமிகப் பொருந்துவதாக இருக்கும்.

 இதனால் என்று  குறிப்பிடப்பட்டுள்ளதால்
 இன்னென்ன காரணங்களால் இவன்
 தகுதியானவன் என்பதை அறிந்து
 தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
 
ஒரு பாடலை எத்தனை கோணங்களில்
சிந்திக்க வைக்கிறார் பாருங்கள்!
அதுதான் திருவள்ளுவர்.

English couplet : 

"This man, this work shall this work out,' let thoughtful
King command; 
Then leave the matter wholly in his servant's hand "

Explanation :

After having considered, " this man can accomplish this,
by these means",let (the king )leave with him
 the discharge of that duty.
 
Transliteration : 

"Ithanai ithanaal ivanmutikkum Endraaindhu
Athanai Avankan vital "



Comments

  1. திருவள்ளுவரின் சிந்தனைக்கு அழகான விளக்கத்தை பதிவிட்டது மிகச்சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts